பாலஸ்தீன அங்கீகாரத்திற்கு தடை கல்லாக நிற்கும் அமெரிக்கா !!
நாடில்லாமல் உலகம் முழுவதும் நாடோடிகளாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுப்பதற்கு ஆரம்பத்தில் காரணகர்த்தாவாக இருந்தது பிரிட்டன் என்றாலும் அதைத் தொடர்ந்து இன்றுவரை இஸ்ரேலை ஊணுகோலாக நின்று தாங்கி பிடித்துக் கொண்டு பாலஸ்தீன சுதந்திரப் போராட்டத்தை முணை மழுங்;கச் செய்து கொண்டும் பாலஸ்தீனத்திற்கான ஐநா.வின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு காரணகர்த்தாவாக திகழ்வது அமெரிக்கா.
ஐ.நா.வை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் அமெரிக்கா - இஸ்ரேலின் கைகளில் இருப்பதால் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக எதாவது ஒரு நல்ல முடிவை ஐ.நா உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பொழுதெல்லாம் பல தடவை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது.
இதை எல்லாம் அறிந்துகொண்டு அவ்வப்பொழுது பாலஸ்தீன சுதந்திரப் போராளிகளை இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்கள் தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் எழுதி உளம் மகிழ்வது அதைத் தொடர்ந்த வாடிக்கையாக அமைந்து விட்டது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு வலுக்கட்டாயமாக பாலஸ்தீனம் உடைக்கப்பட்டதிலிருந்து பல வருடங்கள் போராடி 1988ல் சுதந்திர பிரகடனம் செய்து கொண்டது பாலஸ்தீன். ஆனால் அதை அப்பொழுதே இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், புறக்கனித்தது அன்றிலிருந்து இஸ்ரேலின் அடாவடித் தனத்தால் நிலைகுலைந்து வந்த பாலஸ்தீனத்தின் நிலையைப் பார்த்த மேல்படி நாடுகளில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்து விலகிக் கொண்டாலும் அமெரிக்கா மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை ஓயாது எதிர்த்து வருகிறது.
ஐநா.வில் சாதாரணப் பார்வையாளராக மட்டுமே இதுவரை இருந்து வந்த பாலஸ்தீனம் கடந்த செப்டம்பர் மாதம் கிழக்கு ஜெரூசலத்தின் தலைநகராகக் கொண்ட 1967ல் இருந்த எல்லைகளின்படி பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் உறுப்பு நாடாக அங்கீகரித்துக் கொள்ளும்படி ஐநா.வில் உறுப்பினர் அந்தஸ்து கோரி மஹமூத் அப்பாஸ் மனு செய்திருந்தார்.
இது பற்றிp முடிவெடுப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான 15 நாடுகளிடம் இந்தப் பொறுப்பை ஐ.நா ஒப்படைத்திருந்தது. மேல்படி 15 நாடுகளில் ஏற்கனவே இந்தியா உட்பட China, Brazil, Lebanon, Russia and South Africa பாலஸ்தினத்தை ஐநா.வின் உறுப்பு நாடாக அங்கீகரித்துக் கொள்வதற்கு ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது மீதமுள்ள நாடுகள் Bosnia, Britain, France, Germany, Gabon, Nigeria and Portugal. Colombia and US ஆகும்.
பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்துக்கோரி மனு செய்த தகவல் அறிந்ததும் ஐ.நா. வுக்கான இந்தியப் பிரதிநிதி ஹர்பிந்தர்சிங் பூரி பாலஸ்தீனம் ஐநா.வின் உறுப்பு நாடாவதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கடந்த 1988ம் ஆண்டு பாலஸ்தீனம் சுதந்திரப் பிரகடனம் செய்த போதே அதை அங்கீகரித்த அரபல்லாத முதல் நாடு இந்தியா என்றும் கூறி பெருமிதம் அடைந்தார்.
அதே வேளை பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்துக்கோரி மனு செய்த தகவல் அறிந்ததும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் கருப்பு கார்ட்டூன் ஒபாமா தனது ரத்து அதிகாரத்தைப் பயன் படுத்தி தடுக்கும் என்று அறிக்கை விடுத்து இஸ்ரேலுக்கு செங்சோற்றுக் கடன் தீர்த்துள்ளார்.
ஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் பாலஸ்தீன - இஸ்ரேல் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று பொறுந்தாக் காரணத்தையும் சேர்த்தேக்கூறி அவரது அறியாமையை அல்லது பலஹீனத்தை (இஸ்ரேலுக்கான அடிமை சாசனத்தை) வெளிப்படுத்தி உள்ளார்.
ஏற்கனவே உள்ள 6 ஆதரவு நாடுகள் போக மீதமுள்ள 9 நாடுகளும் ஆதரவாக வாக்களித்தாலும் அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்கும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டக் காரணத்தால் இந்தக் குழுவில் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் பின் வாங்கி விட்டது என்றும் இதனால் எந்த நடிவடிக்கைக்கும் இந்க் குழப் பரிந்துரை செய்யப்படவில்லை, இதனால் இந்த பிரச்சனை மீண்டும் ஐநா.பாதுபாப்பு சபையின் முடிவுக்கே விடப்பட்டு விட்டது என்றத் தகவலை உலக ஊடகங்கள் வெளிப்படுத்தின.
இறுதியாக இந்த முயற்சியும் செயலிழந்தது வருத்தத்தை அளிக்கிறது உலகில் பெரும்பாலான நாடுகள் இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர் பார்த்திருந்தது ஐநா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாடுகள் இதில் பின் வாங்கியது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்