வெள்ளி, நவம்பர் 18, 2011

.



பாலஸ்தீன அங்கீகாரத்திற்கு தடை கல்லாக நிற்கும் அமெரிக்கா !!

நாடில்லாமல் உலகம் முழுவதும் நாடோடிகளாக சுற்றித்திரிந்து கொண்டிருந்த யூதர்களுக்கு பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் என்ற ஒரு நாட்டை உருவாக்கிக் கொடுப்பதற்கு ஆரம்பத்தில் காரணகர்த்தாவாக இருந்தது பிரிட்டன் என்றாலும் அதைத் தொடர்ந்து இன்றுவரை இஸ்ரேலை ஊணுகோலாக நின்று தாங்கி பிடித்துக் கொண்டு பாலஸ்தீன சுதந்திரப் போராட்டத்தை முணை மழுங்;கச் செய்து கொண்டும் பாலஸ்தீனத்திற்கான ஐநா.வின் அங்கீகாரத்தை ரத்து செய்வதற்கு காரணகர்த்தாவாக திகழ்வது அமெரிக்கா.

ஐ.நா.வை இயக்கும் ரிமோட் கன்ட்ரோல் அமெரிக்கா - இஸ்ரேலின் கைகளில் இருப்பதால் பாலஸ்தீனத்தின் விடுதலைக்காக எதாவது ஒரு நல்ல முடிவை ஐ.நா உறுப்பு நாடுகள் கொண்டு வரும் பொழுதெல்லாம் பல தடவை அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்துள்ளது.

இதை எல்லாம் அறிந்துகொண்டு அவ்வப்பொழுது பாலஸ்தீன சுதந்திரப் போராளிகளை இஸ்லாமிய எதிர்ப்பு ஊடகங்கள் தீவிரவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் எழுதி உளம் மகிழ்வது அதைத் தொடர்ந்த வாடிக்கையாக அமைந்து விட்டது.
இரண்டாம் உலக யுத்தத்திற்கு பிறகு வலுக்கட்டாயமாக பாலஸ்தீனம் உடைக்கப்பட்டதிலிருந்து பல வருடங்கள் போராடி 1988ல் சுதந்திர பிரகடனம் செய்து கொண்டது பாலஸ்தீன். ஆனால் அதை அப்பொழுதே இஸ்ரேல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள்புறக்கனித்தது அன்றிலிருந்து இஸ்ரேலின் அடாவடித் தனத்தால் நிலைகுலைந்து வந்த பாலஸ்தீனத்தின் நிலையைப் பார்த்த மேல்படி நாடுகளில் பல நாடுகள் பாலஸ்தீனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதிலிருந்து விலகிக் கொண்டாலும் அமெரிக்கா மட்டும் அன்றிலிருந்து இன்றுவரை ஓயாது எதிர்த்து வருகிறது.  

ஐநா.வில் சாதாரணப் பார்வையாளராக மட்டுமே இதுவரை இருந்து வந்த பாலஸ்தீனம் கடந்த செப்டம்பர் மாதம் கிழக்கு ஜெரூசலத்தின் தலைநகராகக் கொண்ட 1967ல் இருந்த எல்லைகளின்படி பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் உறுப்பு நாடாக அங்கீகரித்துக் கொள்ளும்படி ஐநா.வில் உறுப்பினர் அந்தஸ்து கோரி மஹமூத் அப்பாஸ் மனு செய்திருந்தார். 

இது பற்றிp முடிவெடுப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான 15 நாடுகளிடம் இந்தப் பொறுப்பை ஐ.நா ஒப்படைத்திருந்தது. மேல்படி 15 நாடுகளில் ஏற்கனவே இந்தியா உட்பட China, Brazil, Lebanon, Russia and South Africa பாலஸ்தினத்தை ஐநா.வின் உறுப்பு நாடாக அங்கீகரித்துக்  கொள்வதற்கு ஆதரவளித்திருப்பது குறிப்பிடத்தக்கது மீதமுள்ள நாடுகள் Bosnia, Britain, France, Germany, Gabon, Nigeria and Portugal. Colombia and US ஆகும். 

பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்துக்கோரி மனு செய்த தகவல் அறிந்ததும் ஐ.நா. வுக்கான இந்தியப் பிரதிநிதி ஹர்பிந்தர்சிங் பூரி பாலஸ்தீனம் ஐநா.வின் உறுப்பு நாடாவதற்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும் என்றும் கடந்த 1988ம் ஆண்டு பாலஸ்தீனம் சுதந்திரப் பிரகடனம் செய்த போதே அதை அங்கீகரித்த அரபல்லாத முதல் நாடு இந்தியா என்றும் கூறி பெருமிதம் அடைந்தார். 

அதே வேளை பாலஸ்தீனம் ஐ.நா.வில் உறுப்பினர் அந்தஸ்துக்கோரி மனு செய்த தகவல் அறிந்ததும் அமெரிக்க வெள்ளை மாளிகையின் கருப்பு கார்ட்டூன் ஒபாமா தனது ரத்து அதிகாரத்தைப் பயன் படுத்தி தடுக்கும் என்று அறிக்கை விடுத்து இஸ்ரேலுக்கு செங்சோற்றுக் கடன் தீர்த்துள்ளார்.
ஐ.நா.வில் பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் கிடைத்துவிட்டால் பாலஸ்தீன - இஸ்ரேல் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு குந்தகம் ஏற்பட்டுவிடும் என்று பொறுந்தாக் காரணத்தையும் சேர்த்தேக்கூறி அவரது அறியாமையை அல்லது பலஹீனத்தை (இஸ்ரேலுக்கான அடிமை சாசனத்தை) வெளிப்படுத்தி உள்ளார். 

ஏற்கனவே உள்ள 6 ஆதரவு நாடுகள் போக மீதமுள்ள 9 நாடுகளும் ஆதரவாக வாக்களித்தாலும் அமெரிக்கா தனது ரத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்கும் என்று ஏற்கனவே அறிவித்து விட்டக் காரணத்தால் இந்தக் குழுவில் ஒருமித்த முடிவு எடுக்க முடியாமல் பின் வாங்கி விட்டது என்றும்  இதனால் எந்த நடிவடிக்கைக்கும் இந்க் குழப் பரிந்துரை செய்யப்படவில்லை, இதனால் இந்த பிரச்சனை மீண்டும் ஐநா.பாதுபாப்பு சபையின் முடிவுக்கே விடப்பட்டு விட்டது என்றத் தகவலை உலக ஊடகங்கள் வெளிப்படுத்தின.

இறுதியாக இந்த முயற்சியும் செயலிழந்தது வருத்தத்தை அளிக்கிறது உலகில் பெரும்பாலான நாடுகள் இதில் நல்ல முடிவு கிடைக்கும் என்றே எதிர் பார்த்திருந்தது ஐநா.வின் பாதுகாப்பு கவுன்சிலின் 15 நாடுகள் இதில் பின் வாங்கியது பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

ஞாயிறு, அக்டோபர் 30, 2011

.


إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

நம்பிக்கை கொண்ட ஆண்களையும்> பெண்களையும் துன்புருத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்திகன் வேதனை இருக்கிறது அவர்களுக்கு பொசுக்கும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 85:10>



தொடரும் யூத பயங்கரவாதிகளின் வெறிச்செயல்கள் பற்றி எரிகிறது ஃபலஸ்தீன்.


நவம்பர் 7, 2010

கடந்த நவம்பர் 7 அன்று ஃபலஸ்தீனின் அர்ராஹத் என்ற கிராமத்தில் நுழைந்த இஸ்ரேலிய தீவிரவாத ஆக்கிரமிப்பு படையினர் அங்கு ஒரு பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்தவர்களை கைது செய்து நகருக்கு வெளியே அடைத்து வைத்துவிட்டு அந்த பள்ளிவாசல் முழுவதையும் இடித்து தரைமட்டமாக்கி உள்ளனர். இந்த வெறிச்செயலைக் கண்டித்து அந்த நகரத்து மக்கள் போராட்டத்தில் இறங்கிய பொழுது அவர்களின் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசுவது போல் நாடகமாடி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர் 
.
மேற்படி இடித்து தரைமட்டமாக்கப்பட்டப் பள்ளிவாசல் அரசு அனுமதிப் பெறாமல் கட்டப்பட்டது என்றக் காரணத்தை வந்தேறி இஸ்ரேலிய அரசு வெட்கமில்லாமல் கூறி உள்ளது தான் வேதனையாக உள்ளது. இது அந்த மொத்த ஊரையும் ஆக்ரமிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி செயல் என்பதற்கு கடந்த ஜூலை மாதம் இதே ஊரில் இதே காரணத்தைக் கூறி ஏராளமான வீடுகளை இடித்து தரைமட்டமாக்கப்பட்டது உதாரணமாகும்

அதற்கடுத்து அல்கலீல் நகரின் பள்ளிவாசல் ஒன்றில் நுழைந்த இந்த பயங்கரவாதிகள் அங்கு ஓதுவதற்காக வைக்கப்பட்டிருந்த புனித குர்ஆனின் பிரதிகளை கிழித்தெறிந்ததுடன், முஹம்மது(ஸல்) அவர்ளை இழிவுப்படுத்தி எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை அப்பள்ளிவாசல் முழுவதும் ஒட்டி அகமகிழ்ந்துள்ளனர் 
.
நவம்பர் 10, 2010

கடந்த நவம்பர் 10 அன்று காஸாப் பகுதியில் ரஃப்ஹா என்ற ஊருக்குள் ராணுவ வாகனங்களளுடன், புல்டோஸர் சகிதம் நுழைந்த யூத ஆக்ரமிப்பு படைகள் நதா என்ற குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளது எதிர்த்தவர்களை கண்மூடித் தனமாக சுட்டுத் தள்ளி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் மொத்தக் குடியிருப்பையும் இடித்துத் தரைமட்டமாக்கி உள்ளது. அப்பொழுது அதன் மேலே இஸ்ரேலிய யுத்த விமானங்களும் பறந்திருக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கது குறுகிய நேரத்தில் அந்தப்பகுதி முழுவதும் சரணடைந்து விட்டதால் அங்கிருந்து அந்த விமானங்கள் மறைந்து விட்டதாகவும், எதரிப்பு வலுவாக இருந்திருந்தால் குண்டுகளை பொழிந்திருக்கலாம் என்றும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்

திடீர் ஆக்ரமிப்புகளும், திடீர் தாக்குதல்களும் கடந்த 2009 லிருந்து தான் அதிகரித்துள்ளதாகவும் எதிர்பாராத இந்த தீடீர் தாக்குதலில் ஏராளமான மக்கள் குண்டடிபட்டு குற்றியிரும், குறை உயிருமாய் அள்ளிக்கொண்டு வருகின்றனர் என்று மருத்துவ சேவை ஒருங்கிணைப்பாளர் ஆதம் ஆபூ ஸல்மியா கூறுகிறார் 
  
இதில் இன்னும் வருந்தத் தக்க விஷயம் யாதெனில் திடீர் ஆக்ரமிப்பிற்குள்ளாக்கப்பட்ட இந்த  ஊரிலிருந்து ஏராளமான சிறுவர்களை அவர்களின் தாய், தந்தையர் முன்னிலையிலேயே இழுத்துச் செல்லப்படுவதாகவும் தடுக்க முணைகின்ற நிராயுதபாணிகளாகிய தாய் தந்தையர் ஈவிறக்கமின்றி சுட்டுத் தள்ளப்படுவதாகவும் இவ்வாறு; இழுத்துச் செல்லப்படும் அப்பாவி சிறுவர்களை எல்லையோர தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்வதாகவும் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 33 சிறுவர்கள் இந்த ஈனப் பிறவிகளால் பிடித்துக் கொண்டு வந்து அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் இதுவரை விடுவிக்;கப்படவில்லை என்றும் அந்த ஊர் மக்கள் கூறுகின்றனர்.  

நவம்பர் 11, 2010

அல்நஃப்லஸ் என்ற நகரில் சட்ட விரோதமாக குடியேறிய வந்தேறி யூதர்கள் கடந்த நவம்பர் 11 அன்று எல்லைப் பாதுகாப்பு யூத பயங்கரவாதப் படையினரின் துணையுடன் குழுவாக சென்று ஸாலிம் என்ற கிராமத்தில் அங்குள்ள ஏழை விவசாயிகளின் சுமார் 15 ஆயிரம் சதுரடி நிலப்பரப்பளவிலான ஆலிவ் மரத் தோட்டங்களை தீயிட்டுக் கொளுத்தி உள்ளனர். ஆலிவ் மரங்கள் எண்ணெய் பசை உள்ளதால் நெருப்பைப் பற்ற வைத்த உடன் அசுர வேகத்தில் எரியத் தொடங்கிய தீ அதிவேகமாக பரவி அருகிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆலிவ் மரங்களையும் கருக்கி நாசமாக்கி உள்ளன

இது இப்பொழுது தான் புதிதாக நடக்கும்வெறிச் செயல் அல்ல கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடத்தப்பட்ட இந்த வெறிச் செயல் இன்று பெரிய திட்டத்துடன் நிறைவேற்றப் பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்

ஜைத்தூன் காய்களை விளைச்சல் செய்து உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் தொழிலை மட்டுமே நம்பி வாழும் இந்த ஸாலிம் கிராம மக்களின் வயிறுகளை பற்றி எரியச் செய்த இந்தப் பாவிகளை வலிமை மிக்க அல்லாஹ்விடம் கையேந்தி ஒப்படைத்து உள்ளனர்

இந்த லட்சனத்தில் பாகிஸ்தானின் ஃபலூசிஸ்தானில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் ஃபலூசிஸ்தான் மீது ஏவுகனை தாக்குதல் தொடுக்க பாகிஸ்தானிடம் அமெரிக்கா அனுமதி கேட்டு தொடர்ந்து டார்ச்சர் கொடுத்து வருவதாக செய்திகள் கூறுகிறது இறுதியாக பாகிஸ்தான்  மறுத்து விட்டதாகவும் மற்றொரு செய்தி கூறுகிறது.  

ஊர் வம்பு வழக்கும் தன் செல்லக்குழந்தையை கண்டித்து வீட்டில் வைத்துக் கொள்ளத் வக்கில்லாதவன் ஊரான் பிள்ளையை கண்டிக்க கம்பை தூக்கிக்கொண்டு திரிந்த கதையாய் ஃபலஸ்தீன் மீது அட்டூழியம் செய்யும் இஸ்ரேலிய தீவிரவாதிகளை கண்டிக்க திராணியற்று பாகிஸ்தானுக்குள் தீவிரவாதிகள் இருப்பதாக ஓலமிடுவது ஒபாமாவுக்கு அழகல்ல    
ஃபலஸ்தீன் பிரச்சனையை முடிப்பது தான் என் முதல் வேலை என்று பதவிக்கு வருவதற்கு முன்  கூறிய ஒபாமா என்ன நோக்கத்தரில் அதை அப்பொழுதுக் கூறினார் என்பது இப்பொழுது தான் புரிகிறது

நவம்பர் 14, 2010

புனித பைத்துல் முகத்தஸ் அமையப் பெற்றிருக்கும் ஜெரூஸலத்தின் மத்தியப் பகுதியில் பிரம்மாண்டமான யூத கோயில் ஒன்றை நிருவுவதற்காக கடந்த நவம்பர் 14 அன்று பயங்கரவாத இஸ்ரேல் அரசு யூத தீவிரவாதிகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது.  

புதிதாக கட்டப்படவுள்ள மேற்படி யூத கோயிலுக்கு அனுமதி கிடைத்த உடன் பிரபல யூத கம்பெனி ஒன்று 40 மில்லியன் இஸ்ரேலிய ஷெக்கல்களை வழங்கி உள்ளதாம் 
.
இந்த கோயிலுக்கு தஃபூராத் இஸ்ரேல் என்றப் பெயரும் இடப்பட்டுள்ளது இது பைத்துல் முகத்தஸ் டூமின் அளவை விட பலமடங்கு அளவுப் பெரிதாக அமைக்க இருப்பதாகவும், இந்த யூத கோயில்  ஜெரூஸலத்தின் எந்தப் பகுதியில் நின்றுப் பார்த்தாலும் காட்சி தரும் அளவுக்கு மிக உயரமாக அமைக்க இருப்பதாகவும், இந்த கோயில் பிரபல கட்டிடக் கலை வல்லுநர்களைக்கொண்டு மிகப்பெரிய தொழில் நுட்பத்துடன் அமைக்கவிருப்பதால் இது கட்டி முடிக்கப்படும் கால அளவு சுமார் ஐந்து வருடங்கள் ஆகும் என்றும் ஜெரூஸலத்தின் அமைச்சர் தாலிப் அபூ ஷஆர் தெரிவிக்கிறார்

மேலும் அவர் கூறுகையில் கடந்த மே மாதம் மஸ்ஜிதுல் அக்ஸா அருகில் கராப் எனும் பெயரிலான யூத கோயில் ஒன்று எந்த எதிர்ப்புமின்றி நிருவப்பட்டதாகவும் அப்பொழுதே ஃபலஸ்தீன மக்களும், அரபு நாடுகளும், சர்வதேச இஸ்லாமிய அமைப்புகளும் வீரியத்துடன் எதிர்த்திருந்தால் அந்த கோயிலின் கட்டுமானமும் நிருத்தப்பட்டிருந்திருக்கும் இப்பொழுது தஃபூராத் இஸ்ரேல் கோயிலுக்கான கட்டுமான அனுமதியும் கிடைத்திருக்காது என்று வருத்தத்துடன் கூறியவர் மேலும் கூறுகையில் மிகக் குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கராப் கோயில் மிகப்பெரிய தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டிருப்பதாகவும் அது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்திருப்பதாகவும் கூறுகிறார்.  

சாதாரணமாக குறுகிய காலத்தில் கட்டப்பட்ட கராப் யூத கோயிலே வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக வடிவமைக்;கப்பட்டிருக்கிறதென்றால் மிகப் பெரிய திட்டமிடலுடன் அதுவும் ஐந்து வருட கால அவகாசம் எடுத்து கட்டப்படவுள்ள தஃபூராத் கோயில் எப்படி இருக்குமோ ?  

போராட்டம், போராட்டம் என்று நடத்தி ஒவ்வொருப் போராட்டத்திலும் யூத தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு ஏராளமான உறவுகளை பறிக் கொடுத்ததால் ஃபலஸ்தீன மக்களின் போராட்டம் வலுவிழந்து வருவதையும் யூத பயங்கரவாதிகளின் சதி திட்டங்கள் படிப்படியாக ஃபலஸ்தீனத்தில் நிறைவேறி வருவதையுமே மேற்காணும் நிகழ்வுகள் பறைசாற்றுகின்றன

எந்தக் கூரிய ஆயுதத்திற்கும் அஞ்சாமல் நெஞ்சுறத்துடன் நின்று போராட்டங்களை நடத்தி தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலகுக்கு உணர்த்தியதுடன், உலகில் உள்ள சிறுபான்மை இஸ்லாமிய அமைப்புகளுக்கும் போராட்ட உணர்வைத் ஊட்டியவர்கள் இந்த வீரமிக்க ஃபலஸ்தீனியர்கள் அதனால் தான் இன்றும் அவர்களில் சில மக்கள் அங்கு வாழ முடிகிறது இல்லை என்றால் இந்த சண்டாளர்கள் அப்பொழுதே மொத்த ஃபலஸ்தீனத்தையும் சுருட்டி கையிலெடுத்திருப்பார்கள்

என்ன இழப்புகள் ஏற்பட்டாலும் இழந்த உரிமைகளை வென்றெடுக்கும் வரை உரிமை மீட்பு  போராட்டங்களை நிருத்தக் கூடாது என்பதையே ஃபலஸ்தீன மக்களின் போராட்டங்களின் வீரியம்  குறைந்ததும் பதுங்கி இருந்த வந்தேறிகள் பாய்ந்து அடர்ந்தேறுவதைக் காட்டுகிறது


உணர்வுக்கு எழுதியக் கட்டுரை
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்.

திங்கள், அக்டோபர் 03, 2011

.


إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ

 நம்பிக்கை கொண்ட ஆண்களையும்> பெண்களையும் துன்புருத்தி விட்டு பின்னர் பாவமன்னிப்புக் கோராதவர்களுக்கு நரகத்திகன் வேதனை இருக்கிறது அவர்களுக்கு பொசுக்கும் வேதனை உண்டு. திருக்குர்ஆன் 85:10>



 பாலஸ்தீன சகோதர முஸ்லீம்களுக்காகப் பிரார்த்திப்போம்

அநியாயம் இழைக்கும் ஒரு சமுதாயத்தை இறைவன் ஒட்டு மொத்தமாக அழிக்க நாடினால் அந்த சமுதாயத்தை வழிகேட்டிலேயே விட்டு விடுவான். அத்துடன் அவர்கள் மீதான அவனுடையப; பிடி இறுகுவதற்கான காலக்கெடுவையும் விதித்து விடுவான். அதுவரை அவர்கள் அநியாயமும், அட்டூழியமும் செய்து கொண்டே இருப்பர். 

இறுதியாக அவர்கள் மீது படிப்பினைக்காக ஒரு பஞசத்தையும் அனுப்புவான் அதிலும் அவர்கள் படிப்பினைப் பெறாவிடில் தனது பிடியை இறுக்குவான் அதிலிருந்து அவர்கள் மீள முடியாது.


அவனுடைய அந்தப் பிடிக்குள் இறுகி அந்த சமுதாயம் சிக்கி சின்;னாப்பின்னமாகி அதனுடைய நிலைமை தலைகீழாகப்புரண்டுவிடும்.

....அவர்கள் விஷயத்தில் தீங்கு செய்வதற்கு அல்லாஹ் அவசரப்பட்டிருந்தால் அவர்களின் காலக்கெடு அவர்களுக்கு முடிக்கப்பட்டிருக்கும் நமது சந்திப்பை நம்பாதவர்களை அவர்களது அத்து மீறலில் விட்டு விடுவோம்.10:11  


ஈராக்> ஆப்கான்> பலஸ்தீனப் பகுதிகளுக்குள் அத்து மீறி சென்று அப்பாவி மக்களின் மீது  குண்டுகளை வீசியும்> துப்பாக்கியால் சுட்டும் வீழ்த்துகின்றவர்களின் சொந்த நாட்டு மக்களுடைய இன்றைய நிலை என்னத் தெரியுமா ?


வெளியிலிருந்து வந்து யாரும் அவர்களின் மீது குண்டு வீசவோ> துப்பாக்கியால் சுட வேண்டிய அவசியமோ இல்லாத அளவுக்கு தங்களைத் தாங்களே சுட்டு மடித்துக் கொள்ளும் அவல நிலையை இறைவன் ஏற்படுத்தினான்.


அமெரிக்காவில் ஏற்பட்ட வரலாறு காணாத பொருளாதார வீழ்ச்சியினால் அமெரிக்கர்களின் கடன் அதிகரித்து அதை அடைக்;க முடியாமல் வீடுகளை இழந்து வீதிக்கு வர வெட்கப்பட்டவர்கள் தங்களைத் தாங்களே துப்பாக்கியால் சுட்டு மடித்துக்கொண்டனர் இது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.


இறைவன் அவர்கள் மீது ஏற்படுத்திய இந்தப் பஞ்சத்தின் மூலம் படிப்பினைப் பெற்று பிற சமுதாயத்தை நசுக்குவதிலிருந்து பின் வாங்கவில்லை எனில் இறைக்கட்டளைப் படி அவர்கள் மீது இறைவனுடைய பிடி இறுகுவதை யாரும் தடுக்க முடியாது.


அரபு நாடுகளிடமிருந்து ஏராளமான நிதியுதவி அமெரிக்காவுக்கு சந்து வழியாக அனுப்பப்படுவதாலும்> ஏற்கனவே அரபு நாட்டு எண்ணெய் ஏற்றுமதியில் இலவச விகிதாச்சார பகல் கொள்ளையினாலும் அமெரிக்காவுக்கு முட்டுக் கொடுத்து நிருத்தப்பட்டுள்ளது.  


இது எவ்வளவு நாள் நீடிக்கும் இறைவன் விதித்த காலக்கெடு வந்து விட்டால் அரபு நாடுகள் மட்டுமல்லாது மொத்த உலகமே தங்களது பொருளாதாரத்தைக் கொட்டி முட்டுக் கொடுக்க முயன்றாலும் முடியாது. உமது இறைவனின் பிடி கடுமையானது. திருக்குர்ஆன் 85:12


அமெரிக்காவுடைய இன்றைய இந்த நிலமையைக் கண்டு உலகில் எந்த மக்களும் ஐயோ பாவமே! என்று சொல்ல வில்லை மாறாக சந்தோஷம் அடைகின்றனர் காரணம் அவர்களுடைய ‘’ ஹிரோஷிமா’’ மீது அணுகுண்டு வீசியதிலிருந்து இன்றைய ஈராக் வரை மக்கள் அவர்களுடைய அடாவடித் தனத்தைக் கண்டு வருவதால் அவர்களின் மீது அனுதாபம் ஏற்படவில்லை.

அமெரிககாவுடைய மற்றொரு முகம் தான் இஸ்ரேல் என்பதை யாரும் மறுக்க முடியாது. அந்த இரட்டை முகத்தை இறைவன் அழித்தொழிக்கும் காலம் விரைவில் வரும்.

அதற்காக நாம் ஒவ்வொருவரும் இறைவனிடம் அழுது மன்றாடி இறைஞ்சுவதிலிருந்து பின் வாங்கி விட வேண்டாம். 
இறைவன் அறிந்தவன் இறைவன் மீது பொறுப்பு சாட்டுங்கள்

தொடர்ந்து இரண்டு நாட்களாக அநியாயமாக கொல்லப்பட்ட பலஸ்தீன சகோதர> சகோதரிகளுடைய மறுமை வாழ்க்கைக்காக பிரார்த்தியுங்கள்.


அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத் தியாரி, மினல் முஃமினீன வல் முஸ்லிமீன, வ இன்னா இன்ஷா அல்லாஹூ பிகும் லாஹிகூன (வயர்ஹமுல்லாஹூல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தாஹிரீன) அஸாலுல்லாஹ லனா வலக்குமுல் ஆஃபியத்த

பொருள் :விசுவாசிகள் மற்றும் முஸ்லிம்களிலுள்ள வீடுகளை உடையோரே! உங்கள் மீது ஸலாம் உண்டாவதாக! நிச்சயமாக நாங்களும் அல்லாஹ் நாடினால் உங்களோடு வந்து சேரக்கூடியவர்கள், (நம்மில் முந்தியவர்களுக்கும், நம்மில் பிந்துகிறவர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! எங்களுக்கும், உங்களுக்கும் அல்லாஹ்விடம் சுகத்தைக் கேட்கிறேன். அறிவிப்பாளர்: புரைதா(ரலி) அவர்கள் நூல்:முஸ்லிம், இப்னுமாஜா


அவர்களுடைய திடீர் பிரிவால் வாடி வதங்கும் அவர்களுடைய பச்சிளங் குழந்தைகளுடைய எதிர் காலத்துக்காக இறைவனிடம் பிரார்த்தியுங்கள்.

அநீதியாளர்களை அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள் அல்லாஹ்வின் பிடி கடுமையானது


உமது இறைவனின் பிடி கடுமையானது. திருக்குர்ஆன் 85:12

அவர்கள் தமது இறைவனின் கட்டளையை மீறினர். எனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவர்களை இடிமுழக்கம் தாக்கியது. திருக்குர்ஆன் 51:44

அவர்கள் எழுந்து நிற்கவும் சக்தி பெறவில்லை> அவர்கள் உதவி பெறுவோராகவும் இல்லை. திருக்குர்ஆன் 51: 45




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்